| ADDED : மார் 12, 2024 11:38 PM
திருப்புத்துார் : லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் கிராமங்களில் மக்கள் பிரதிநிதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேடைகளில் வரி வசூல்,- திட்ட நிதி ஒதுக்கீடு சதவீத ஒப்பீடு கிராமங்களிலும் பேசப்படுகிறது.திருப்புத்துார் ஒன்றிய கிராமங்களில் அரசு திட்டங்கள் குறித்து அறிவிப்பு தொடர்ந்து வருகின்றன. நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் திறப்பு விழாக்கள் நடந்து வருகின்றன. பெரிய அளவிலான திட்டங்கள் இல்லாமல் சிறிய திட்டங்களான அங்கன் கட்டடம், பயணியர் நிழற் கூரை, ரேஷன்கடை, நாடகமேடை.. நுாலகம் போன்றவற்றையும் அமைச்சர், எம்.பி., திறந்து வைக்கின்றனர். அப்போது அரசின் நிதி ஒதுக்கீடு குறித்தும் பேசப்படுகிறது.தற்போது மாநிலத்தில் மாநிலத்திலிருந்து எவ்வளவு ஜி.எஸ்.டி. மத்திய அரசுக்கு சென்றது. மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு 29 காசு தான் வந்தது' என்பது தி.மு.க.,வினரின் பிரதான பிரசார பேசும் பொருளாகி விட்டது. பதிலுக்கு பா.ஜ.வினர் திருநெல்வேலியிலிருந்து எவ்வளவு வரி சென்றது. மாநில அரசு திருநெல்வேலிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியது.' என்று பதிலளிக்கின்றனர்.கிராமங்களிலும் இந்த நிதி ஒப்பீடு துவங்கியுள்ளது. அமைச்சர் பெரியகருப்பன் திருப்புத்துார் ஒன்றியம் ஊர்குளத்தான்பட்டியில் நடந்த ரேஷன்கடை திறப்பு விழாவில் பேசுகையில், பொதுமக்கள் முன்னிலையில், ஊராட்சி தலைவர் மாணிக்கவாசகத்திடம் ஊராட்சியிலிருந்து ஆண்டுக்கு அரசுக்கு எவ்வளவு வரி செலுத்தினீர்கள்' என்று கேட்க, தலைவரோ, ரூ 2.5 லட்சம்' எனக் கூற, அமைச்சரோ, அப்ப 3 ஆண்டுக்கு ரூ 7.5 லட்சம் வரி செலுத்தியுள்ளீர்கள். ஆனால் அரசு உங்கள் ஊராட்சியில் 3.89 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றியுள்ளது. எத்தனை மடங்கு அதிகம் பாருங்கள்' என்று கூறி கிராமத்தினரின் கை தட்டலை பெற்றார்.