உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் புதிய பிளாட்பாரம் அமைத்தல் 

 சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் புதிய பிளாட்பாரம் அமைத்தல் 

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரத்திலுள்ள பழைய ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களை அகற்றி, புதிய ஷீட் பொருத்துதல், 4 வது பிளாட்பாரம் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை -- ராமேஸ்வரம், எர்ணாகுளம் - -வேளாங்கண்ணி உட்பட வாராந்திர சிறப்பு ரயில்கள் சிவகங்கை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் மூலம் ஏராளமான பயணிகள் சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வளர்ச்சி பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. முதற்கட்டமாக இங்கு இரண்டு டிக்கெட் வழங்கும் கவுண்டர் மற்றும் தனியார் பங்களிப்புடன் டிக்கெட் வழங்கும் மிஷின் வந்துள்ளது. வயது முதிர்ந்த பயணிகளின் வசதிக்கென 'லிப்ட்' வசதி செய்துள்ளனர். 4வது பிளாட்பாரம் பணி அடுத்தகட்டமாக சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் பல ஆண்டுகளுக்கு முன் முதல், 2 வது பிளாட்பாரத்தில் போடப்பட்ட கூரையில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் சிதிலமடைந்து, மழைக் காலங்களில் மழை நீர் பிளாட்பாரத்தில் ஒழுகியதால் பயணிகள் நிற்க இடமின்றி தவித்தனர். இதை தவிர்க்கும் நோக்கில், முதல், 2வது பிளாட்பாரத்தில் பயணிகள் நிழற்குடை மேல் உள்ள பழைய ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களை அகற்றி, புதிய ஷீட்கள் பொருத்துவதற்கு டெண்டர் விடப் பட்டுள்ளது. இங்கு 3 பிளாட்பாரம் இருந்தாலும், பெரும் பாலும் ரயில்களை முதல், இரண்டாவது பிளாட் பாரத்தில் மட்டுமே நிற்கும். 3வது பிளாட்பாரத்தில் ரயில் தண்டவாளங்களை பராமரிக்கும் 'இன்ஜின்கள்' நிறுத்தப்பட்டிருந்தன. காலப்போக்கில் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், 3வது பிளாட்பாரத்திலும் ரயில்களை நிறுத்தும் நோக்கில், கூடுதல் பிளாட்பாரம் ஏற்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி பழைய குட்ெஷட் இருந்த இடத்தில் கூடுதலாக 4 வது பிளாட்பாரம் அமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை