உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  நலம் காக்கும் மருத்துவ முகாம் ரத்த மாதிரி சேகரிப்பில் சர்ச்சை

 நலம் காக்கும் மருத்துவ முகாம் ரத்த மாதிரி சேகரிப்பில் சர்ச்சை

மானாமதுரை: மானாமதுரை சி.எஸ்.ஐ., உயர்நிலை பள்ளியில் நேற்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவமுகாம் நடந்தது. மக்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகளை ஆய்வகத்திற்கு கொண்டு செல்ல எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் மாணவர்கள் கைகளில் கையுறை இன்றி ரத்த மாதிரிகளை எடுத்து சென்றனர். தகுதியான மருத்துவ பணியாளர்கள் எடுத்து செல்ல வேண்டியதை பள்ளி மாணவர்கள் கொண்டு சென்றனர். முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மார்க்கண்டேயன் கூறியதாவது: ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த ஊழியர்கள் உணவருந்த சென்றிருந்த போது மாணவர்கள் ஆர்வமுடன் அவர்களே ரத்த மாதிரிகளை எடுத்து சென்றுள்ளனர். தகவல் அறிந்தவுடன் மாணவர்கள் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை