உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  துாய்மை பணியாளர்களுக்கு தொல்லை கவுன்சிலர் குற்றச்சாட்டு

 துாய்மை பணியாளர்களுக்கு தொல்லை கவுன்சிலர் குற்றச்சாட்டு

திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சி கூட்டத்தில் பெண் துாய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து த.மா.கா., கவுன்சிலர் பாரத்ராஜா வெளிநடப்பு செய்தார். திருப்புவனம் பேரூராட்சி கூட்டம் தலைவர் சேங்கைமாறன் தலைமையில் நடந்தது.செயல் அலுவலர் கவிதா வரவேற்றார்.எழுத்தர் மதியழகன் கூட்ட தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் த.மா.கா., கவுன்சிலர் பாரத்ராஜா பேசுகையில், தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் துாய்மை பணியாளர்கள் வருகை பதிவின் போது ஒருவர் தனது அலைபேசி எண் எழுதப்பட்ட துண்டுச்சீட்டை பெண் துாய்மை பணியாளர்களுக்கு மத்தியில் எறிந்துள்ளார். தொடர்ச்சியாக துாய்மை பணியாளர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பணியாளர் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. துாய்மை பணியாளர்கள் அச்சத்துடன் உள்ளனர் என கூறி வெளிநடப்பு செய்தார். செயல் அலுவலர் கவிதா சம்பந்தப்பட்ட நபரை அழைத்து எச்சரித்துள்ளோம், என்றார். பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை