உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரம் காளி கோயிலில் சேதமடைந்த சிலைகள்: அலட்சியத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள்

மடப்புரம் காளி கோயிலில் சேதமடைந்த சிலைகள்: அலட்சியத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புவனம்: பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள சேதமடைந்த சிலைகளில் பராமரிப்பு பணிகள் செய்யாமல் வேஷ்டி, சேலைகளை வைத்துமறைப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதம் மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், எதிரிகளை பழிவாங்க காசு வெட்டிப் போடும் பழக்கமும் இங்கு உண்டு. சிவபெருமான் மதுரை நகரின் எல்லையை கண்டறிய தனது கழுத்தில் உள்ள பாம்பை வீசிய போது தலையும் வாலும் சேர்ந்த இடமே மடப்புரம் என்று அழைக்கப்படுகிறது. இரு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை மூலம் ரூ.40 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. இதுதவிர தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் என தனியாக ஏராளமாக வருவாய் கிடைத்து வருகிறது. அறநிலையத்துறைக்கு வருவாயை ஈட்டி தரும் கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு கடந்த 2017 ஆண்டு ஜூன் 4 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே அம்மனின் குதிரை வாகனத்தின் கீழே இருக்கும் பூதகணங்களின் சிலைகள் சேதமடைந்தன. அதே போல அம்மனின் குதிரை வாகனமும், அய்யனார் கோயிலில் உள்ள கோபுர சிலைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. கும்பாபிஷேகத்திற்காக எடுத்து வைக்கப்பட்ட பல சிலைகள் மீண்டும் வைக்கப்படவே இல்லை. சேதமடைந்த சிலைகளை பராமரிப்பு செய்யாமல் அவற்றை வேஷ்டி, சேலை வைத்து மறைத்து அலங்காரம் செய்து பக்தர்களை ஏமாற்றுகின்றனர். அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பொருட்களை விசேஷ தினங்களில் கூட அணிவிப்பதில்லை. வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு அறநிலையத்துறை செயல்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சேதமடைந்த சிலைகளை கண்டு பக்தர்கள் மனம் வெதும்பி செல்கின்றனர். எனவே சேதமடைந்த சிலைகளை அறநிலையத்துறை புதுப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Gokila Kumaran
ஜூலை 23, 2024 10:00

ப்ளீஸ் கோவில் சிலைகளை மீண்டும் புதுப்பிக்கவும், அதேபோல் புதுமண்டபம் பத்ரகாளி அம்மன் சிலை, அங்குள்ள சிற்பங்கள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் ப்ளீஸ்.


V RAMASWAMY
ஜூலை 22, 2024 08:42

இப்படி கோயில் உண்டியல் வசூலை எடுத்து மற்ற காரியங்களுக்கு, மற்ற மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு செலவு செய்யும் இந்த அறநிலையத்துறை அறமில்லாத்துறையாக செயல்படுவதால், இனி பக்தர்கல் காணிக்கைகளை உண்டியல்களில் போடாமல் இருத்தல் நலம். கோயில்களுக்கு ஆராதனை செய்ய எண்ணெய், நெய், முதலிய பொருட்களை வாங்கிக்கொடுக்கலாமே? அல்லது தங்களாகாவே திருப்பணி கமிட்டி அமைத்து சிதிலமடைந்தவையை புனரமைப்பு செய்யலாம்.


Tetra
ஜூலை 21, 2024 22:08

இவர்களை நன்கு அறிந்தும் இவர்கள்தானே 40க்கு 40 கொடுத்து அழகு பார்க்கிறார்கள்


தமிழ்வேள்
ஜூலை 21, 2024 21:44

திருட்டு திராவிட அயோக்கியர்கள் ஒவ்வொரு பயலும் அழிந்து மண்ணோடு மண்ணாக வேண்டும் என்று மடப்புரம் பத்ரகாளி அம்மன் பக்தர்கள் அனைவரும் தனித்தனியாக காசு வெட்டி போடவேண்டும்.. பத்ரகாளி தாய் நிச்சயம் நிறைவேற்றி தருவார்... திராவிட தீவிரவாதம் எல்லை மீறி போகிறது


rajaraja928
ஜூலை 22, 2024 22:13

அம்மா பார்க்கட்டும்


Kalpana Moorthi
ஜூலை 21, 2024 19:05

Padra kail Aman temble world famous peple all coming in tha temble I n begesat tembe all peple like that in very care full and uncarless and he is my commend and this commend to all people in the ward comment in l am a really sorry thank you so much


Muthukumar
ஜூலை 21, 2024 18:07

தினமலர் இல்லையென்றால் இந்துக்கள் என்றோ அநாதைகள் ஆகிருப்பர்


ஆனந்த்
ஜூலை 21, 2024 17:01

மேலும் பாதிப்பு ஏற்படுவதற்குள் அறநிலையத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


sridhar
ஜூலை 21, 2024 17:12

வேடிக்கை பார்த்து சிரிப்பதே அறநிலைய துறை தான், நடவடிக்கை எப்படி எடுக்கும்…


SVS
ஜூலை 21, 2024 17:22

உண்மையை உரக்க சொல்லி உள்ளீர்கள்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி