உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் அறுவடை ஆரம்பம் களமாகும் நெடுஞ்சாலையில் அபாயம்

மானாமதுரையில் அறுவடை ஆரம்பம் களமாகும் நெடுஞ்சாலையில் அபாயம்

மானாமதுரை : மானாமதுரை இளையான்குடி பகுதிகளில் அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் கிராமங்களில் போதிய களம் இல்லாத காரணத்தினால் நெடுஞ்சாலைகளை களமாக்குவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.மானாமதுரை இளையான்குடி பகுதிகளில் விளைந்துள்ள நெல், கம்பு, சோளம், கேழ்வரகுபோன்ற பயிர்களை விவசாயிகள் தற்போது அறுவடை செய்கின்றனர். நெற்பயிர்களை விவசாய நிலங்களிலேயே கதிரடிக்கும் இயந்திரங்களைக் கொண்டு விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற பயிர்களை அறுவடை செய்து அவற்றை களங்களுக்கு கொண்டு சென்று பிரித்து எடுத்து வரும் நிலையில் பல்வேறு கிராமங்களில் கதிரடிக்கும் களமில்லாத காரணத்தால் நெடுஞ்சாலைகளில் காய வைத்து தானியங்களை தனியாக பிரித்தெடுத்து வருகின்றனர். அவ்வழியாக செல்லும் வாகனங்களினால் விபத்து அபாயம் உள்ளது.வாகன ஓட்டிகள் கூறுகையில், தற்போது மானாமதுரை சிவகங்கை,மானாமதுரை -தாயமங்கலம், மானாமதுரை-இளையான்குடி சாலை ஓரங்களில் எங்கு பார்த்தாலும் விவசாயிகள் பயிர்களை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு செய்வதால்போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்பட்டு விபத்து அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.ஆகவே நெடுஞ்சாலைகளில் பயிர்களை பிரித்தெடுக்கும் பணிகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ