மேலும் செய்திகள்
மாட்டு வண்டி பந்தயம்
4 minutes ago
சாய்பாபா பிறந்தநாள் விழா
4 minutes ago
காரைக்குடியில் அடை மழை
23-Nov-2025
இளையான்குடியில் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
23-Nov-2025
மானாமதுரையில் உள்ள புது பஸ் ஸ்டாண்ட் மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் அமைந்துள்ளது. மதுரை, சென்னை, திருச்சி, கோயம்புத்துார், ஈரோடு, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமப் பகுதிகளுக்கும் தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இப்பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தி வருகிற நிலையில் குடிநீர், கழிப்பறை, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பயணிகள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நான்கு வழி சாலை ஓரத்தில் அமைந்துள்ளதால் பஸ் ஸ்டாண்டிற்கு முன்பாக நான்கு வழிச்சாலை மேம்பாலம் முடிந்து விடுவதினால் அங்கிருந்து வேகமாக வரும் வாகனங்களால் கடந்த 6 ஆண்டுகளில் பஸ் ஸ்டாண்டிற்கு சென்ற 50 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புது பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் நுழையும் பகுதியில் நேற்று முன்தினம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அலங்கார நுழைவு வாயில் அமைப்பதற்காக மிகப் பெரிய பள்ளங்களை தோண்டி போட்டதினால் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் 4 வழிச்சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்வதினால் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வராததால் அங்கு கடைகளை வைத்துள்ள வியாபாரிகள் வியாபாரமின்றி மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே பணிகள் முடிவடையும் வரை பஸ்கள் வெளியேறும் பாதை வழியாக பஸ்கள் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பயணிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது, மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்குள் குடிநீர், கழிப்பறை, மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லை. இரவு 7 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் குடிமகன்கள் குடித்து விட்டு பயணிகளிடம் பிரச்னையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்டிற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அதனை செய்யாமல் பஸ்கள் நுழையும் இடத்தில் தேவையில்லாமல் அலங்கார நுழைவு வாயில் கட்டுவதற்காக மிகப்பெரிய பள்ளங்களை தோண்டியுள்ளனர். இதனால் நீண்ட மாதங்கள் பஸ்கள் உள்ளே வராமல் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகளுக்கும் போதிய வியாபாரம் இல்லாமல் மிகுந்த நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து நகராட்சி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது, நகராட்சி பொறியாளர் பிரிவைச் சேர்ந்தவர்களும், தனியார் ஒப்பந்ததாரரும் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் பயணிகளுக்கும், வியாபாரிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளத்தை தோண்டியுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
4 minutes ago
4 minutes ago
23-Nov-2025
23-Nov-2025