உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை

திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை

திருப்புத்துார் : திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகளைக் கடந்து 3 ஆண்டுகளாகி விட்டதால் விரைவாக கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அனுமதிக்க பக்தர்கள் கோரியுள்ளனர்.திருப்புத்துார் தென் திசை தெய்வமாக பூமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மூலவர் சன்னதியில் சப்தமாதர்களில் நடுநாயகமாக உள்ள வைஷ்ணவியே பூமாயி அம்மனாக பக்தர்கள் தரிசிக்கின்றனர்.பைரவர், ஆதிவிநாயகர், முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி நடந்த போது 21 துாண்கள் அமைத்து மண்டபம் எழுப்பப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் துாண்களில் இருந்த கம்பிகள் துருப்பிடித்து வலு விழந்து வருவதாக புகார்கள் எழுந்தது. அப்போது சிமென்ட் பூச்சால் விரிசல் மட்டும் பூசப்பட்டன.கடந்த 2008 ல் கும்பாபிேஷகம் நடந்து தற்போது 15 ஆண்டுகளாகி விட்டது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணி நடக்க வேண்டும். இதனால் கடந்த 3 ஆண்டுகளாகவே பக்தர்கள் கோயிலுக்கு திருப்பணி மேற்கொள்ள அறநிலையத்துறையினரிடம் அனுமதி கோரி வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன் அனுமதி கோரப்பட்டு கிடப்பில் உள்ளது.கோயிலில் விழாக் காலங்களில் பக்தர்களுக்கு இட நெருக்கடியைத் தவிர்க்க, அன்னதானக் கூடத்தை கோயிலுக்கு வெளியே விரிவாக அமைக்கவும், கான்கிரிட் துாண்களை கல் துாண்களாக மாற்றி மண்டபத்தை புதுப்பிக்கவும், சுற்றுச்சுவரில் உள்ள குரங்குகளால் சேதமடைந்த சுதை சிற்பங்களை சீரமைக்கவும், விமான,கோபுர வண்ணத்தை புதுப்பிக்க பணிகள் மேற்கொள்ள திருப்பணிக்கான அனுமதியை விரைவாக அனுமதி அளிக்க அறநிலையத்துறையினருக்கு பக்தர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை