உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சர்க்கரை நோய் மாத்திரை மருத்துவமனையில் தட்டுப்பாடு

 சர்க்கரை நோய் மாத்திரை மருத்துவமனையில் தட்டுப்பாடு

சிவகங்கை: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கக்கூடிய வில்டாக்ளிப்டின்' மாத்திரைக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை தமிழக மருந்து கழகம் வழங்குகிறது. தட்டுப்பாடு உள்ள சில மருந்து மாத்திரைகளை மருத்துவத்துறை நிர்வாகம் உள்ளூரில் கொள்முதல் செய்து நோயாளிகளுக்கு வழங்குகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் வில்டாக்ளிப்டின் மாத்திரைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த மாத்திரைகள் உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதேபோல் நமது உடலின் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. அதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கிறது. மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், வில்டாக்ளிப்டின் மாத்திரை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்து வாரத்தில் மாத்திரை வினியோகம் செய்யப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை