உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முத்துப்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில்ஜூலை 31 வரை நேரடி சேர்க்கை

முத்துப்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில்ஜூலை 31 வரை நேரடி சேர்க்கை

சிவகங்கை: சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில் ஜூலை 31 வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இங்கு பிட்டர், எலக்ட்ரீசியன், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டென்ட், சி.என்.சி., மெஷினிங் டெக்னீசியன், ரோபோட்டிங் டிஜிடல் மேனுபேக்சரிங் டெக்னீசியன், எலக்ட்ரிக் வாகன மெக்கானிக் ஆகிய தொழில் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். நேரடி விண்ணப்பத்திற்கு வருவோர் அலைபேசி எண், இ- மெயில் முகவரி, மதிப்பெண், ஜாதி, மாற்றுச்சான்று, போட்டோ, ஆதார் அட்டை நகலுடன் பங்கேற்க வேண்டும். பயிற்சியின் போது உதவி தொகை மாதம் ரூ.750, இலவச பாடபுத்தகம், சைக்கிள், சீருடை, பஸ் பாஸ் வழங்கப்படும். புதுமை பெண், தமிழ்புதல்வன் திட்டத்தில் தகுதி வாய்ந்த பயிற்சியாளருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். விபரங்களுக்கு 99448 87754ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை