| ADDED : ஜன 26, 2024 05:32 AM
திருப்புவனம்: தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரும், தே.மு.தி.க., தலைவருமான நடிகர் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் பிடிமண் நேற்று திருப்புவனம் வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம், இறந்தவர்களின் அஸ்தியை கரைப்பது, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்குவது சிறப்பு வாய்ந்தது என்பதால் தமிழகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் திருப்புவனம் வந்து செல்வது வழக்கம்.மறைந்த நடிகர் விஜயகாந்தின் சொந்த ஊர் மதுரை, எனவே அவரது சொந்த ஊரின் அருகே உள்ள திருப்புவனத்தில் பிடிமண் கரைக்கப்பட வேண்டும் என அவரது மனைவி பிரேமலதா விருப்பப்படி உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன், விசாரணை குழு செயலாளர் அழகர்சாமி, மாவட்ட செயலாளர் திருவேங்கடம், மாவட்ட பொருளாளர் துரைபாஸ்கரன், ஒன்றிய செயலாளர் காந்தி, நகர செயலாளர் அலாவூதீன், மற்றும் நிர்வாகிகள் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் சிறப்பு பூஜை செய்து பிடிமண்ணை கரைத்து புஷ்பவனேஸ்வரரை வழிபட்டனர்.