உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சிவகங்கை, நவ.22- சிவகங்கை அருகே சாமியார்பட்டியில் தி.மு.க., நகர, ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தி.மு.க., மாவட்ட அவை தலைவர் கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், ஜோன்ஸ் ரூசோ, தமிழரசி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், நல்லசேதுபதி, சண்முகம் உட்பட மாவட்ட அளவிலான பேரூர், நகர, ஒன்றிய செயலாளர்கள் பங்கேற்றனர். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன் கட்சி நிர்வாகிகளிடம், சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஓட்டுச்சாவடி பாக முகவர்கள் ஈடுபட்டு, வாக்காளர்கள் யாரும் விடுபடாமல் திருத்த பணிகளை ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன் இணைந்து, செய்து முடிக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை