மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
1 hour(s) ago
பயிற்சி முகாம்
1 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
1 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
1 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
1 hour(s) ago
காரைக்குடி: தொடர் மழை மற்றும் குறைந்த தயாரிப்பு காரணமாக மண்பானைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதோடு, விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு, பாரம்பரியமாக மண் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். நாகரீக வளர்ச்சி காரணமாக மண்பானையில் பொங்கல் வைப்பது குறைந்து போனது. தற்போது பொதுமக்களிடையே மண்பானையின் மருத்துவ குணம் குறித்த விழிப்புணர்வால், மண்பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர் மழை பெய்ததால், மண்பானை தயாரிப்பு பாதிப்படைந்துள்ளது. காரைக்குடி கோட்டையூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பானை கொள்முதல் மற்றும் வியாபாரத்தில், வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையால் மண்பானை விலை உயர்ந்துள்ளதாகவும் கொள்முதல் செய்வதே கடினமாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.கோட்டையூரைச் சேர்ந்த மண்பாண்ட வியாபாரி இந்திராணி கூறுகையில்: மானாமதுரை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோல்கட்டா, புதுச்சேரி உள்ளிட்ட 30 ஊர்களில் இருந்து மண்பாண்ட பொருட்களை வாங்குகிறோம். தற்போது மண்பானை குறித்த விழிப்புணர்வால் மக்கள், அதிகம் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். ஆனால், மண்பாண்ட உற்பத்தி செய்வோர் குறைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக தற்போது, தொழில் மிகவும் கடினமாக உள்ளது. விலையும் உயர்ந்து விட்டது. செட்டிநாட்டு பகுதியில் நகரத்தார்கள் கால்படி, அரைக்கால் படி பானைகளையே அதிகம் விரும்பி வாங்குவர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago