| ADDED : நவ 28, 2025 08:03 AM
சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பல்கலை கருத்தரங்கு கூடத்தில் இன்று கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் 2 ம் கட்டமாக வட்டார அளவிலான கல்வி கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, கல்வி கடன் மேளா, பிரசாரங்கள் இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை அழகப்பா பல்கலை வீறுகவியரசர் முடியரசனார் அரங்கில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் https://pmvidyalaxmi.co.inஇணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், மாணவ, மாணவியர் அவரது பெற்றோரின் இரண்டு போட்டோ, பெற்றோரும், மாணவரும் இணைந்த வங்கி கணக்கு புத்தக நகல், இருப்பிட, வருமானம், சாதி சான்று நகல், பான்கார்டு, ஆதார் அட்டை நகல், கல்லுாரியில் பெற்ற உண்மை தன்மை சான்று, அசல் கல்வி கட்டண விபரம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இதர கல்வி மதிப்பெண் சான்றுகள், கவுன்சிலிங் மூலம் சேர்ந்திருந்தால் அதற்கான ஒரிஜினல் உத்தரவு நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம்.