| ADDED : டிச 27, 2025 05:43 AM
காரைக்குடி: காரைக்குடி மகர் நோன்பு திடலில் நற்பவி கிரியேட்டர்ஸ் சார்பில் குணாகுகை பொருட்காட்சி நடக்கிறது. நற்பவி கிரியேட்டர்ஸ் ஸ்ரீகாந்த் கூறுகையில்: காரைக்குடியில் குணா குகை போன்ற குகை அமைப்புடன் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. திகில் குகை, நீர்வீழ்ச்சி, இயந்திர மிருகங்களின் அமைப்புகளுடன், ராட்டினங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 36 நாட்கள் நடக்கவுள்ள பொருட்காட்சி தினமும் மாலை 5:00 மணிக்கு தொடங்கும். மேலும் குழந்தைகளுக்கு படகு சவாரி, பலுான் விளையாட்டு, டோரா டோரா ராட்டினம், ஜெயின்ட் வீல், கோஸ்டர் பிரோக்டான்ஸ், கொலம்பஸ் ராட்டினம், ஜம்பிங் கார், லைக், வாட்டர் போட் விளையாட்டுகள் உள்ளன. ஸ்டேஷனரி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மதுரை ஜிகர்தண்டா, சிப்ஸ், மலைத்தேன், பாப்கார்ன், சிங்கர் சிப்ஸ் உட்பட விதவிதமான உணவு வகைகள் வைக்கப்பட்டுள்ளன, என்றார்.