உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  புதுக்குளத்தில் கருகும் நெற்பயிர் காப்பாற்ற போராடும் விவசாயிகள்

 புதுக்குளத்தில் கருகும் நெற்பயிர் காப்பாற்ற போராடும் விவசாயிகள்

இளையான்குடி: இளையான்குடி தாயமங்கலம் அருகே உள்ள புதுக்குளம் கிராமத்தில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற பம்பு செட் வைத்து குட்டைகளில் கிடக்கும் தண்ணீரை வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். தாயமங்கலம் அருகே உள்ள புதுக்குளம் கிராமம் வானம் பார்த்த பூமியான இங்கு கண்மாயில் இருந்த சிறிதளவு தண்ணீரைக் கொண்ட 2 மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது நெற்பயிர்களில் பால் பிடித்து, பரிச்சல் ஏற்படும் நிலையில் போதிய தண்ணீர் இல்லாமல் கருகி வருவதை தொடர்ந்து விவசாயிகள் அருகில் உள்ள குளம் மற்றும் குட்டைகளில் கிடைக்கும் தண்ணீரை பம்பு செட் வைத்து வயல்களுக்கு தண்ணீரை பாய்ச்சி தற்போது பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். புதுக்குளத்தைச் சேர்ந்த விவசாயி வீரமுத்து கூறியதாவது: கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக கண்மாய்க்கு தண்ணீர் வந்ததை தொடர்ந்தும், அடுத்தடுத்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் 120 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெல் விவசாயத்தை துவங்கினோம். தற்போது நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து பால் பிடிக்கும் நேரத்தில் கண்மாயில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனதையடுத்து வயல்வெளிகளுக்கு அருகில் குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை மோட்டார்களை வைத்து கூடுதலாக பணம் செலவழித்து தண்ணீரை பாய்ச்சி வருகிறோம். இந்த தண்ணீரும் இன்னும் சில நாட்களுக்கு உள்ளதால் மேற்கொண்டு தண்ணீருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மழையை எதிர்பார்த்து காத்துள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை