உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அணையில் தேங்கிய ஆகாய தாமரை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

 அணையில் தேங்கிய ஆகாய தாமரை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கானுார் படுகை அணையில் தேங்கிய ஆகாய தாமரையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். வைகை ஆற்றின் குறுக்கே கானுார் படுகை அணை 410 மீட்டர் நீளத்தில் 40 கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இந்த படுகை அணை மூலம் கானுார் மற்றும் பழையனுார் ஆகிய கிராமங்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், மேலும் கானுார் படுகை அணையில் தண்ணீர் தேக்கப்படுவதால் திருப்புவனம் புதுார், மடப்புரம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட போது மதுரை மாவட்ட வைகை ஆற்றில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகளும் அடித்து வரப்பட்டு கானுார் படுகை அணையில் தேங்கியது. குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் ஆகாயத்தாமரை செடிகள் அணையில் தேங்கி இருப்பதால் வளர்ச்சியடைந்து அணை முழுவதும் பரவ வாய்ப்புண்டு. கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும் போது ஆகாயத்தாமரை செடிகள் அப்படியே கண்மாய்களுக்கும் சென்று விவசாயத்தை பாதிக்கும், எனவே பொதுப் பணித்துறை அதிகாரிகள் படுகை அணையில் தேங்கிய ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி