உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரோட்டில் குதிரைகளால் விபத்து அச்சம்

ரோட்டில் குதிரைகளால் விபத்து அச்சம்

சிவகங்கை: சிவகங்கையில் ரோட்டில் திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சம் நிலவி வருகிறது.சிவகங்கையில் ரோட்டில் திரியும் மாடுகள், குதிரைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. குறிப்பாக அரண்மனைவாசல், மதுரை முக்கு போன்ற பகுதிகளில் மாடுகளும், திருப்புத்துார் ரோடு, கலெக்டர் அலுவலக வளாக பகுதிகளில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரித்துஉள்ளன. வாகனங்கள் அதிகம் செல்லும் ரோடுகளில் குதிரைகள் ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், மாடு, குதிரைகளை கட்டுப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ