உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெற்றோர்களுக்கு பாத பூஜை

பெற்றோர்களுக்கு பாத பூஜை

காரைக்குடி, : புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பாதபூஜை நிகழ்ச்சியில், திருவாடானை அரசு கலைக்கல்லுாரி தமிழ் துறை தலைவர் பழனியப்பன், கீழச்சீவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி தலைமையாசிரியை வள்ளியம்மை பேசினர். பள்ளி தாளாளர் சுவாமிநாதன் வரவேற்றார். வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன் பொருளாளர் முகமது மீரா முன்னிலை வகித்தனர். காரைக்குடி வித்யாகிரி பள்ளி முதல்வர் ஹேமாமாலினி புதுவயல் ஸ்ரீவித்யகிரி பள்ளி முதல்வர் குமார் மற்றும் ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர். முதுகலை ஆசிரியர் ஜெயங்கொண்டான் தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை