உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

சிவகங்கை:சிவகங்கை மஜித்ரோடு முத்துமுனியாண்டி 65, ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அரசு அருங்காட்சியகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பிப்ரவரியில் ஆஞ்சியோ பரிசோதனை செய்தார். சில மாதங்களாக துாங்காமல் இருந்தார். நேற்று டூவீலரில் வெளியே சென்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரே சுடுகாட்டு பகுதியில் மரத்தின் அடியில் டூவீலர் நிறுத்தப்பட்ட நிலையில் மரத்தின் கிளையில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை