உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் ரோட்டில் சிதறும் குப்பை

சிவகங்கையில் ரோட்டில் சிதறும் குப்பை

சிவகங்கை, - சிவகங்கை நகராட்சியில் சேகரமாகும் குப்பையை வாகனங்களில் வலை கட்டி மூடாமல் கொண்டு செல்வதால் ரோட்டில் குப்பை சிதறி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பை மருத்துவக்கல்லுாரி பொது மயானம் அருகில் உள்ள குப்பை கிடங்கு, காளவாசல், மருதுபாண்டியர் நகர் குப்பை தரம் பிரிக்கும் இடத்திற்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.டிராக்டரில் எடுத்து செல்லப்படும் குப்பையின் மேல் பகுதியில் வலை கட்டாமல் செல்கின்றனர். இதனால் காற்றில் குப்பை பறந்து வழி நெடுகிலும் சிதறி விழுகிறது. இவற்றால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் துாய்மை பணியாளர்கள் குப்பை வாகனங்கள் மீது பாதுகாப்பு இல்லாமல் அமர்ந்து செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே சிவகங்கை நகராட்சி பகுதிகளில் இருந்து குப்பை கொண்டு செல்லும் வாகனங்களில் வலை கட்டி மூடி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை