உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காஸ் சிலிண்டர் புக்கிங் நுகர்வோர் அதிருப்தி

காஸ் சிலிண்டர் புக்கிங் நுகர்வோர் அதிருப்தி

காரைக்குடி: காரைக்குடியில் பாரத் காஸ் சிலிண்டர் புக்கிங் மற்றும் டெலிவரி குறித்த குறுஞ்செய்தி கிடைக்காததால் நுகர்வோர் அதிருப்தி அடைகின்றனர்.காரைக்குடியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர். வாடிக்கையாளர்கள் தங்களது அலைபேசி மூலம் அந்தந்த காஸ் ஏஜன்சி புக்கிங் நம்பர் மூலம் முன்பதிவு செய்கின்றனர். முன்பதிவு செய்ததை உறுதி செய்யும் வகையில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அதேபோல காஸ் சிலிண்டர் பெற்றுக் கொண்ட பிறகும் அது குறித்த மெசேஜ் வாடிக்கையாளருக்கு வரும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் பெற்றது உறுதி செய்யப்படும். இந்நிலையில் பாரத் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு, கடந்த சில மாதங்களாக புக்கிங் மற்றும் டெலிவரி குறித்த எந்த குறுந்த தகவலும் வருவதில்லை என தெரிவிக்கின்றனர். இது குறித்து வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட புகார் எண்ணில், புகார் செய்யும் போது அவர்களுக்கே தெரியாமல், காஸ் புக்கிங் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.பாரத் காஸ் ஏஜன்சியை சேர்ந்த ஒருவர் கூறும்போது:தற்போது புக்கிங் டோல் ப்ரீ எண் மாற்றப்பட்டுள்ளது அது பலருக்கு தெரியாமல் உள்ளது. குறுஞ்செய்தி குறித்த தகவல் வராமல் இருக்காது. வேறு அலைபேசி எண்ணை கொடுத்திருந்தால் அவர்களுக்கு முறையாக குறுந்தகவல் சென்று இருக்காது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்