உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  காரைக்குடியில் அடை மழை

 காரைக்குடியில் அடை மழை

காரைக்குடி: காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியில், நேற்று காலை முதல் மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குமரி கடலை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறி வித்தது. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. மதியம் முதல் கனமழை பெய்யத் தொடங்கியது. காரைக்குடி, பள்ளத்துார், கானாடுகாத்தான் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் அடைமழை பெய்ததோடு, மேகமூட்டத்துடன் இருளாக காட்சியளித்தது. வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை