உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அதிவேக டிப்பர் லாரி: அச்சத்தில் மக்கள்

அதிவேக டிப்பர் லாரி: அச்சத்தில் மக்கள்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அதிவேகமாக இயக்கப்படும் டிப்பர் லாரிகளால்மக்கள் அச்சத்தில் உள்ளனர். இத்தாலுகாவில் பிரான்மலை சுற்றுவட்டார பகுதியில் எம்.சாண்ட் மணல் தயாரிக்கும் குவாரிகள் செயல்படுகிறது. வெளியில் இருந்து பெரிய கற்களை கொண்டு வந்து இப்பகுதியில் உடைத்து மணலாக்கி வெளியூர்களுக்கு கொண்டு செல்கின்றனர்.இதற்காக இயக்கப்படும் டிப்பர் லாரிகள் அதிவேகத்தில் செல்கிறது. அதில் பாதுகாப்பற்ற முறையில் அதிக கற்களை ஏற்றி வருகின்றனர்.இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் குறுகிய சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த லாரிகளின் வேகத்தை குறைக்கவும், இரவு நேரங்களில் அதன் இயக்கத்தை கட்டுப்படுத்தவும் போலீசார் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை