| ADDED : நவ 21, 2025 04:58 AM
சிவகங்கை: உழவர் நலத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை அலுவலர்களை, விவசாயத்துறையுடன் இணைக்கும் அரசின் திட்டத்தை கண்டித்து சிவகங்கையில் தோட்டக்கலை அலுவலர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்திற்கு தோட்டக் கலை அலுவலர்கள் நல சங்க மாவட்ட செயலாளர் பிரியங்கா தலைமை வகித்தார். உதவி தோட்டக்கலை அலு வலர்கள் சங்க மாவட்ட செயலாளர் காளிமுத்து முன்னிலை வகித்தார். தோட்டக்கலை அலு வலர் சங்க மாநில துணை தலைவர் பாண்டியராஜன் கோரிக்கையை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், டிப்ளமோ தோட்டக்கலை படித்தவர்களை, விவ சாயம் சார்ந்த ஆலோசனை வழங்க அனுப்பும் பட்சத்தில், நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கு வதில் சிரமம் ஏற்படும். அரசு இத்திட்டத்தை கைவிட்டு, பணியிட மாறுதல் செய்யப்பட்ட உதவி தோட்டக்கலை அலுவலர்களை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த உறுப் பினர்கள் பங்கேற்றனர்.