உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பன்னாட்டு கருத்தரங்கு

பன்னாட்டு கருத்தரங்கு

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறை தலைவர் மதிராஜ் வரவேற்றார். அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க. ரவி தலைமையேற்றார். சிங்கப்பூர் ஜேம்ஸ் குக் பல்கலை., பேராசிரியர் அபிஷேக் சிங் மற்றும் ஸ்ரீலங்கா சவுத் ஈஸ்டர்ன் பல்கலை., பேராசிரியர் தௌபிக் பேசினர், நிகழ்ச்சியில் கருத்தரங்கு மலரை துணைவேந்தர் க. ரவி வெளியிட்டார். உதவி பேராசிரியர் கார்த்திலிங்கம் நன்றி கூறினார்.மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன், உதவி சுற்றுலா அலுவலர் ஜான்சன், சுற்றுலா வழிகாட்டி மணிகண்டன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்