உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டதேவி தேர் வெள்ளோட்டம்: 1500 போலீசார் பாதுகாப்பு

கண்டதேவி தேர் வெள்ளோட்டம்: 1500 போலீசார் பாதுகாப்பு

சிவகங்கை:தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில் பிப்.11ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ள நிலையில் எஸ்.பி., தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டு அதன் வெள்ளோட்டம் பிப்.11ல் நடைபெற உள்ளது. தேரோடும் வீதியில் 6 இடங்களில் 18 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேரோடும் வீதிகளை சுற்றிலும் தடுப்பு அமைக்கும் பணி நடக்கிறது. பாதுகாப்பு பணியில் எஸ்.பி., அர்விந்த் தலைமையில் 10 டி.எஸ்.பி., 25 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1500 போலீசார் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை