| ADDED : நவ 22, 2025 02:49 AM
காரைக்குடி: க்யூ.எஸ்., நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆசிய பல்கலை அளவிலான தரவரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலை, 369 வது இடத்தையும், தெற்கு ஆசிய அளவில் 93 வது இடத்தையும், இந்திய அளவில் 49 வது இடத்தையும் பெற்றுள்ளது. 2025ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 1529 க்கும் மேற்பட்ட ஆசிய அளவிலான பல்கலைகள் கலந்து கொண்டன. டைம்ஸ் உயர்கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட பன்முக அறிவியல் தரவரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலை 251 - 300வது பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களில் 16 வது இடத்தையும், தமிழக அளவில் 2ம் இடத்தையும் பெற்றுள்ளது. இத்தரவரிசை பட்டியலில் கலந்து கொள்ள அழகப்பா பல்கலை தரவரிசை பிரிவின் இயக்குனர் ஜெயகாந்தன் தரவுகளை சேகரித்து சரியாக பகுப்பாய்வு செய்து சமர்ப்பித்தார். மேலும் தேசிய தர நிர்ணயக் குழுவால் வழங்கப்பட்ட சி.ஜி.பி.ஏ. 3.59 தரப்புள்ளிகளுடன் இரட்டை முறையில் ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம், தேசிய மனித வளத்துறை வழங்கும் தரவரிசையில் பல்கலை அளவில் 44வது இடம், புது பல்கலை அளவில் 14 வது இடம், உலக பல்கலைத் தரவரிசையில் 801 -- 1000 வது இடமும் பெற்றுள்ளது. ஆசிய பல்கலைத் தரவரிசையில் 251-= 300 வது இடமும் பெற்று உள்ளது. தரவரிசையில் அழகப்பா பல்கலையை இடம்பெறச் செய்த பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை துணைவேந்தர் ரவி பாராட்டினார்.