உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அமைச்சரிடம் ஆதரவு திரட்டிய கார்த்தி எம்.பி., : சூடுபிடிக்கும் சிவகங்கை களம்  

அமைச்சரிடம் ஆதரவு திரட்டிய கார்த்தி எம்.பி., : சூடுபிடிக்கும் சிவகங்கை களம்  

சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்.,க்கு ஒதுக்கப்பட்டாலும், வேட்பாளர் பெயர் அறிவிக்கும் முன்பே தி.மு.க., அமைச்சரை கார்த்தி எம்.பி., சந்தித்து ஆதரவு திரட்டினார்.தி.மு.க., மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின், பொது செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளன.இதையடுத்து சிவகங்கை லோக்சபா தொகுதியை தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், வேட்பாளர் பெயர் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தனக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாமக்கல் உட்பட பல்வேறு ஆலயங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கார்த்தி எம்.பி., சாமி தரிசனம் செய்து வருகிறார்.நேற்று திருப்புத்துாரில் அமைச்சர் பெரியகருப்பன் வீட்டிற்கு சென்று சந்தித்த கார்த்தி எம்.பி., இந்த முறையும் தான் போட்டியிட தி.மு.க., ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தி அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை