உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  l கல்லல் ஒன்றியத்தில் வசதி இல்லாததால் கிராமம் l துாரெடுக்கப்படாத கண்மாயால் விவசாயமும் இல்லை

 l கல்லல் ஒன்றியத்தில் வசதி இல்லாததால் கிராமம் l துாரெடுக்கப்படாத கண்மாயால் விவசாயமும் இல்லை

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்துக்குட்பட்ட செவரக்கோட்டை ஊராட்சி பட்டணம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன. விவசாயமே பிரதான தொழிலாக இருந்தது. இங்குள்ள பட்டணம் கண்மாய், இற்றிக்கண்மாய் மூலம் 200 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடந்து வந்தது.20 ஆண்டு களுக்கும் மேலாக கண்மாய் துார் வாரப் படாததால் கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்து விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. சாலை முற்றிலும் சேதமடைந்து பயணத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் வாகனங்கள் முறையாக வருவதில்லை. பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் நீண்ட துாரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. தவிர தாழ்வாகச் செல்லும் மின்கம்பி, அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு என பல்வேறு பிரச்னைகளால் மக்கள் சிரமப்படுகின்றனர். மாரிக்கண்ணு கூறுகையில், சாலை அமைத்து பல வருடங்கள் ஆகி விட்டது. பஸ் வசதி இல்லை. தற்போது, மினி பஸ் மட்டுமே சில நேரங்களில் வருகிறது. சாலையின் நடுவே தாழ் வாகச் செல்லும் மின்கம்பி யால், பள்ளி வாகனங்களும், பொதுமக்களும் அச்சத்துடனே கடந்து செல்ல வேண்டியுள்ளது. புகார் அளித்தால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. தவிர அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் பலரும் கிராமத்தை விட்டு புலம்பெயர்ந்து விட்டனர். கல்யாணி கூறுகையில், விவசாயத்தின் நீர் ஆதாரமான பட்டணம் கண்மாய் துார்வாரப்படவில்லை. விவசாயமே கேள்விக்குறியாகி உள்ளது. பலமுறை புகார் அளித்தும், துார்வார நிதி இல்லை என்கின்றனர். தவிர, கிராமம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகிறது. ஓட்டு வீடுகளை உடைத்து உணவுப் பொருட்களை பாத்திரத்துடன் துாக்கிச் செல்கிறது. பல்வேறு பிரச்னையால் மக்கள் ஊரை விட்டு வெளியூர் சென்று விட்டனர். இங்கு செயல்பட்ட அரசுப் பள்ளியும் மூடப்பட்டு விட்டது. மாண வர்கள் வெளியூர் சென்று படிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை