உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கார்த்திகையை முன்னிட்டு திருமலையில் மகா தீபம்

 கார்த்திகையை முன்னிட்டு திருமலையில் மகா தீபம்

சிவகங்கை: சிவகங்கை அருகே திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை பாகம்பிரியாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து தேவஸ்தானம், சேதுநகர் மக்கள் சார்பில் மலைமீதுள்ள கொப்பரையில் 150 கிலோ எடை நெய் ஊற்றி, நேற்று மாலை 5:45 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மகாதீபத்தை தரிசித்து சென்றனர். * தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், முத்துக்குமாரசுவாமி கோயில், பாலமுருகன் கோயில், தி.ராம.சாமி. கோயில் , தண்டாயுதபாணி மலைக் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை தொடர்ந்து கோயில் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை