உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வடக்கூரில் மஞ்சுவிரட்டு: 10 பேர் காயம்

வடக்கூரில் மஞ்சுவிரட்டு: 10 பேர் காயம்

நெற்குப்பை : திருப்புத்தூர் அருகே வடக்கூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமுற்றனர். தொழுவிற்கு 200க்கும் மேற்பட்ட காளைகள் வந்தன. முதலில் தாமரை காட்டு அய்யனார் கோயில் காளை அவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து காளைகள் அவிழ்க்கப்பட்டன. மாடுகளை பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி காசு, பாத்திரங்கள், குத்து விளக்கு, ரொக்க பரிசுகள் வழங்கினர். காளைகள் முட்டியதில் வீரர்கள் 10 பேர் காயமுற்றனர். அனுமதி பெறாத மஞ்சுவிரட்டு என்பதால், நெற்குப்பை போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி