உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பிரேத பரிசோதனை கூடம் கட்டுமான பணி ஆய்வு

 பிரேத பரிசோதனை கூடம் கட்டுமான பணி ஆய்வு

திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனையில் 63 லட்ச ரூபாய் செலவில் ராஜ்ய சபா உறுப்பினர் ப.சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடக்கும் புதிய பிரேத பரிசோதனை கூடம் கட்டுமான பணிகளை நேற்று ஆய்வு செய்தார். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரேத பரிசோதனை கூடம் பயன்பாட்டில் உள்ளது. கட்டடத்தில் இடப்பற்றாக்குறை, குளிர்சாதன வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான உடல்கள் உடற்கூராய்விற்கு மதுரை, சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்படும். பல்வேறு சிரமங்கள் உள்ள நிலையில் நவீன பிரேத பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் ராஜ்ய சபா உறுப்பினர் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்படும் நவீன பிரேத பரிசோதனை கூடம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி, நகர் தலைவர் நடராசன் உடன் இருந்தனர். சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப்பணி முடிவுற்ற நிலையில் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆய்வு செய்து திறப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் காங்., எம்.பி., அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை