மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
8 hour(s) ago
பயிற்சி முகாம்
8 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
8 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
8 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
8 hour(s) ago
இளையான்குடி : இளையான்குடியிலிருந்து சிவகங்கை சென்ற அரசு பஸ்சில் அதிகளவு மாணவர்கள் மற்றும்பயணிகள் ஏறிச் சென்றதால் ஓவர் லோடு காரணமாக பஸ் கவிழும் நிலைக்கு சென்றது. ஆபத்தை உணர்ந்த டிரைவர், கண்டக்டர் பஸ்சை வழியில் நிறுத்தி விட்டனர்.இளையான்குடியிலிருந்து சிவகங்கைக்கு மாலை நேரத்தில் போதுமான பஸ்கள் இல்லாததால் தினந்தோறும் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று மாலை 4:00 மணிக்கு இளையான்குடியிலிருந்து சிவகங்கைக்கு செல்ல வேண்டிய டவுன் பஸ் வராத காரணத்தால் மாலை 5:15 மணிக்கு இளையான்குடியிலிருந்து சிவகங்கை சென்ற அரசு பஸ்சில் 120க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறினர். பஸ் புறப்பட்ட நிலையில் ஒரு பக்கமாக சாய்ந்து சென்றது. மேலும் இளையான்குடி பைபாஸ் சாலையில் பஸ் சென்ற போது மாணவர்கள் பஸ்சின் கூரையில் ஏற முற்பட்டனர். பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சை வழியில் நிறுத்தி மாணவர்களையும்,பயணிகளையும் கீழே இறக்கி விட்டனர். அதற்குப் பிறகு வந்த பஸ்களில் மாணவர்கள், பயணிகளை ஏற்றிவிட்டனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago