உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திருப்புத்துாரில் டிச. 30 சொர்க்கவாசல் திறப்பு

 திருப்புத்துாரில் டிச. 30 சொர்க்கவாசல் திறப்பு

திருப்புத்துார்: திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் மற்றும் திருத்தளிநாதர் கோயிலில் டிச.30 காலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் மார்கழி உத்ஸவம் டிச.16ல் துவங்கியது. தினசரி அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி மற்றும் மார்கழி சிறப்பு பூஜை நடந்து வருகிறது. டிச.30ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7:45 மணிக்கு மேல் 8:45 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் தேவியருடன் எழுந்தருளல் நடைபெறும். இரவு 8:45 மணிக்கு கருடசேவையும் நடைபெறும். ஜன.11ல் கூடாரவல்லி உத்ஸவத்தை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியாருக்கு திருமஞ்சனமும், காலை 11:00 மணிக்கு திருவாராதனமும் நடைபெறும். திருத்தளிநாதர் கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறும். பின்னர் மூலவர் யோகநாராயணப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து உற்ஸவர் புறப்பாடாகி பெரிய பிரகாரத்தில் வலம் வந்து தீபாராதனை நடந்து காலை 6:00 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை