மேலும் செய்திகள்
'மாஜி' முதல்வர் பன்னீர்செல்வம் 'ஆப்சென்ட்'
15-Oct-2025
மானாமதுரை: மானாமதுரையில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி வேனின் பின்னால் வந்த கார்கள் மீது பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். மானாமதுரையில் அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய,நகர கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பழனிசாமி வேனில் சென்ற போது அவரது வேனை தொடர்ந்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்ட கார்களில் பின் தொடர்ந்தனர். வழி விடும் முருகன் கோயில் அருகே அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக கூடியிருந்த தொண்டர்களின் ஒருவரது காலில் அ.தி.மு.க.,வினர் வந்த கார் இடித்ததால் அங்கிருந்தவர்கள் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நிர்வாகிகளின் 5க்கும் மேற்பட்ட கார்கள் மீது தாக்குதல் நடத்தினர். மதுரையில் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒன்றாக ஒரே காரில் வந்த போது மானாமதுரையில் அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரனோடு சேர்ந்து ஒன்றாக பசும்பொன் செல்ல திட்டமிட்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக மானாமதுரை வழி விடு முருகன் கோயில் அருகே காத்திருந்தனர். மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து தினகரன் வந்த வேன் மற்றும் அவருக்கு பின்னால் வந்த கார்கள் நீண்ட தூரத்திற்கு நின்றது. போலீசார் வழிவிடு முருகன் கோயில் அருகே காத்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையனை அங்கிருந்து கிளம்ப வலியுறுத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கிளம்பினர். தொடர்ந்து தினகரன் பின்னர் சசிகலா ஆகியோர் அடுத்தடுத்து சென்றனர்.
15-Oct-2025