உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தனியார் பஸ்சில் புகை அலறிய பயணிகள்

 தனியார் பஸ்சில் புகை அலறிய பயணிகள்

திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சக்குடி விலக்கில் தனியார் பஸ்சில் திடீரென புகை ஏற்பட்டதால் பயணிகள் அலறியடித்து இறங்கினர். நேற்று காலை எட்டு மணிக்கு சக்குடி விலக்கு அருகே மதுரை சென்ற தனியார் பஸ்சின் இன்ஜின் பகுதியில் திடீரென புகை கிளம்பி பஸ் முழுவதும் பரவியது. பயணிகள் அலறியடித்து பஸ்சை விட்டு இறங்கி ஓடினர். பஸ் ஊழியர்கள், அருகில் இருந்த மக்கள் தண்ணீர் ஊற்றி புகையை கட்டுப்படுத்தினர். பஸ் ரேடியேட்டரில் தண்ணீர் இன்றி சூடேறி புகை கிளம்பியதாக ஊழியர்கள் தெரிவித்தனர். பயணிகள் அனைவரும் அடுத்தடுத்து வந்த பஸ்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். அரை மணி நேரத்திற்கு பிறகு பழுதான பஸ் அகற்றப்பட்ட பின் போக்குவரத்து சரியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை