உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குட்கா, புகையிலை விற்றால் அபராதம்

குட்கா, புகையிலை விற்றால் அபராதம்

சிவகங்கை: மாவட்டத்தில் தடையை மீறி புகையிலை, குட்கா பொருளை விற்பனை செய்தால் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்ககூடாது. தடையை மீறி விற்பனை செய்தால், முதல் முறையாக பிடிபடும் விற்பனையாளருக்கு ரூ.25,000, இரண்டாம் முறை விற்பவருக்கு ரூ.50,000, மூன்றாம் முறை விற்பது தெரிந்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் தடையை மீறி இவற்றை விற்பனை செய்யும் கடை உரிமை ரத்து செய்யப்படும். முதல் முறையாக பிடிபட்டால் தற்காலிக உரிம பதிவு சான்று ரத்து செய்து, மீண்டும் கடை திறப்பதற்கு நிபந்தனைக்கு உட்பட்டு 15 நாட்களுக்கு குறையாமல் லைசென்ஸ் சான்று வகை தீர்ப்பு அலுவலர் முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.பதிவு சான்று வகைக்கு அபராதம் ரூ.25 ஆயிரம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்கள் ரூ.100க்கான அரசு முத்திரை தாளில் இனி வரும் காலங்களில் இவற்றை விற்க மாட்டேன் என வாக்குமூலம் அளிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்