உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்கள் நலப்பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் 

மக்கள் நலப்பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை: மக்கள் நல பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வலியுறுத்தி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.மலைகண்ணன்,மனோகரன், அன்புசெல்வி, பூமிநாதன்,பாரதி முன்னிலை வகித்தனர்.அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் சங்கரசுப்பிரமணியன், ஐ.சி.டி.எஸ்., சங்க மாநில பொது செயலாளர் வாசுகி ஆகியோர் பேசினர்.தேர்தல் வாக்குறுதிபடி மக்கள் நலப்பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். இறந்த பணியாளருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல் மற்றும் ஒரே இடத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பினர். ஒன்றிய தலைவர் சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ