உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாலுகா அலுவலகத்தில் பழைய நில ஆவணங்கள் பொது மக்கள் கோரிக்கை

தாலுகா அலுவலகத்தில் பழைய நில ஆவணங்கள் பொது மக்கள் கோரிக்கை

திருப்புத்துார்: திருப்புத்துார் தாலுகா அலுவலகங்களிலேயே பழைய நில ஆவணங்களையும் வழங்க பொது மக்கள் கோரியுள்ளனர்.திருப்புத்துார் தாலுகாவில் 1950க்கு முந்தைய எஸ்.எல்.ஆர். நில ஆவணங்கள்,பின்னர் 1980க்கு முந்தைய யூ.டி.ஆர். நில ஆவணங்கள், சிவகங்கை மாவட்ட ஆவண வைப்பறையில் உள்ளது.நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் நிலம் குறித்த 1950 மற்றும் 1980ம் ஆண்டிற்கு முந்தைய நிலை குறித்து தெரிந்து கொள்ள இந்த ஆவணங்களை இங்கிருந்து பெறுகின்றனர். அதற்கான கட்டணம் செலுத்தி மனு எழுதி கேட்டால் 15 நாட்களில் ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும்.ஆனால் போதிய பணியாளர் இல்லாததால் ஆவணங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.மேலும் இதற்காக பொதுமக்கள் பல மாதங்கள் அலைய வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் நிலப் பிரச்னைகளை தீர்க்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பழைய ஆவணங்களையும் தாலுகா அலுவலகங்களில் வைப்பறை ஏற்படுத்தி பாதுகாக்க கோரியுள்ளனர். இதன் மூலம் எளிதாக பொதுமக்கள் ஆவணங்களை பெற உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை