உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிப்காட்டில் குடிநீர் குழாய் பித்தளை திறப்பான் திருட்டு பொதுமக்கள் அதிர்ச்சி

 சிப்காட்டில் குடிநீர் குழாய் பித்தளை திறப்பான் திருட்டு பொதுமக்கள் அதிர்ச்சி

மானாமதுரை: மானாமதுரை சிப்காட் பகுதியில் குடிநீர் குழாயில் உள்ள பித்தளை திறப்பான்கள் திருட்டு போன சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சிப்காட் ராஜேந்திரன் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு தினம் தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இக்குழாய்களில் குடிநீரை திறந்து பிடித்து விட்டு அதனை மூடுவதற்கு பித்தளையிலான திறப்பான்கள் போடப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த திறப்பான்களை திருடர்கள் திருடிக் கொண்டு சென்றனர். காலையில் தண்ணீர் பிடிக்க வந்த பொதுமக்கள் திறப்பான்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மாதம் சிப்காட் அருகே உள்ள தயா நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரது வீட்டில் 40 பவுன் தங்க நகை மற்றும் பணம் வெள்ளிப் பொருட்களும், அதேபோன்று அதற்கு அருகில் உள்ள ஒருவரது வீட்டிலும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தயாபுரம் ரயில்வே கேட் அருகே ஒருவரது வீட்டிற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த டூவீலரும் திருடு போன நிலையில் தற்போது குடிநீர் குழாய்களில் உள்ள திறப்பான்களை கூடவா திருடுகிறார்கள் என பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆகவே சிப்காட் போலீசார் இரவில் ரோந்து சென்று திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி