உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறாவயல் மஞ்சுவிரட்டில்  இறந்த 2 பேருக்கு நிவாரணம்

சிறாவயல் மஞ்சுவிரட்டில்  இறந்த 2 பேருக்கு நிவாரணம்

சிவகங்கை: சிறாவயல் மஞ்சுவிரட்டில் காளைகள் குத்தி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதி தலா ரூ.3 லட்சத்தைஅமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.திருப்புத்துார் அருகே சிறாவயலில் ஜன., 17 அன்று மஞ்சு விரட்டு நடந்தது. திறந்தவெளி பொட்டலில் நடந்த மஞ்சுவிரட்டில் வேடிக்கை பார்த்த கே.வலையபட்டி ராமன் மகன் ராகுல் 12, மருதங்குடி முத்துராமன் மகன் மாடுபிடி வீரர் மணிமுத்து 35 இருவரும்காளை முட்டியதில் பலியாகினர். இவர்களுக்கு முதல்வர் அறிவித்த தலா ரூ.3 லட்சம் நிதியை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் அவர்களது குடும்பத்தாரிடம் வழங்கினர். திருப்புத்துார் தாசில்தார் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை