உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுப்பன் கால்வாய் திட்டத்தை சீரமைப்பது அவசியம்! ஆற்றில் வீணாக கலக்கும் மழை நீர்

சுப்பன் கால்வாய் திட்டத்தை சீரமைப்பது அவசியம்! ஆற்றில் வீணாக கலக்கும் மழை நீர்

மானாமதுரை : துார்ந்து போய் கிடக்கும் சுப்பன் கால்வாய் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மானாமதுரை, இளையான்குடி தாலுகா விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.மானாமதுரை அருகே பெரியகோட்டை, வேம்பத்தூர், கள்ளர்குளம் பகுதி வழியாக வரும் மழைநீர் வேலூர் அருகே உப்பாறு ஆறாக உருவெடுத்து வைகை ஆற்றில் கலக்கிறது. இந்த நீரை மானாமதுரை பகுதிகளில் உள்ள செய்களத்தூர், மஞ்சிக்குளம், கல்குறிச்சி, ஆலங்குளம், பனிக்கனேந்தல் வழியாக 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மற்றும் ஏராளமான ஊரணிகள் மற்றும் நீர் நிலைகள் ஆகியவற்றை நிரப்பிய பின்னர் இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கண்மாய் மற்றும் நீர்நிலைகளை நிரப்பி இளையான்குடி பெரிய கண்மாய்க்கு சென்று சேர்கின்றன. கடந்த 30 ஆண்டிற்கு முன் சுப்பன் கால்வாய் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டாக சுப்பன் கால்வாய் திட்டம் முடங்கிப் போனதால், விவசாயிகள் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில், இப்பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமபடுகின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது,சுப்பன் கால்வாய் தடுப்பணை ஷட்டர்கள் சேதம் அடைந்துள்ளது. வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளதாலும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டன. மழைக்காலங்களில் உபரியாக வரும் மழைநீர் வீணாக ஆற்றில் சென்று விடுகிறது. பொதுப்பணித்துறையினர் மானாமதுரை, இளையான்குடி பகுதி விவசாயிகளின் நலன் கருதி முடங்கிப் போன சுப்பன் கால்வாய் திட்டத்தை புனரமைக்க வேண்டும், என்றனர்.///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை