உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை; சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை; சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதி

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 15க்கும் மேற்பட்ட டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 800க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என 210க்கும் மேற்பட்ட டாக்டர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் தற்போது 200க்கும் குறைவான டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 15க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு வரும் டாக்டர்கள் உடனடியாக மாறுதலில் சென்று விடுகின்றனர். இல்லாவிட்டால் மாற்றுப்பணியில் மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு சென்று விடுகின்றனர். இதேநிலை நீடிப்பதால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையை சரி செய்ய முடியாத நிலை உள்ளது. கடந்த மாதம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எக்கோ பரிசோதனைக்கு இருந்த ஒரு டாக்டரும் பணி மாறுதலில் மதுரைக்கு சென்றதால் எக்கோ பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல் மருத்துவமனையில் நெப்ராலஜிஸ்ட், நியூராலஜிஸ்ட், ரேடியாலஜிஸ்ட் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. ரேடியாலஜிஸ்ட் டாக்டர்கள் 6 பேர் பணிபுரியவேண்டிய இடத்தில் 3 பேர் மட்டுமே பணிபுரிவதால் ஒரு ஸ்கேன் எடுக்க நீண்ட நாட்கள் நோயாளிகள் காத்திருக்கும் சூழல் உள்ளது. மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் காலியாக உள்ள பணியிடங்களில் டாக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை