மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
14 hour(s) ago
பயிற்சி முகாம்
14 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
14 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
14 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
14 hour(s) ago
சிவகங்கை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் கையெழுத்து இயக்கம் நடந்தது.காலியாக உள்ள பணியிடங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்து ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை பணிநியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.2015ம் ஆண்டிற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளாக கல்லுாரி ஆசிரியர் பணி நியமனம் நடைபெறாததால் உயர்கல்வி தரம் பெரிதும் பாதிப்பதாக உள்ளது. கல்லுாரி ஆசிரியர் பணிக்கான உரிய கல்வித் தகுதிகளைப் பெற்றிருந்தும் நிரந்தரப் பணிக்கான வாய்ப்பு கிடைக்காமல் பலர் கவுரவ விரிவுரையாளர்களாகவே பணியாற்றி ஓய்வு பெறும் நிலைக்கு வந்து விட்டனர்.ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வலியுறுத்தி சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் கையெழுத்து இயக்கம் நடந்தது. கிளை தலைவர் பாண்டியராமன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் லாரன்ஸ் சேவியர், துணைத்தலைவர் மைக்கேல், இணைச்செயலர் சதிஷ்கண்ணன், சிவகங்கை, ராமநாதபுரம் மண்டலத்தின் துணைத்தலைவர் சிவா, இணைச்செயலர் சோமசுந்தர மணிகண்டன் கலந்துகொண்டனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago