உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் : கொலையா என விசாரணை

சிவகங்கையில் கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் : கொலையா என விசாரணை

சிவகங்கை : சிவகங்கை அருகே வாலிபரை சைக்கிளில் கட்டி கிணற்றில் வீசி கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை அருகேயுள்ள கோமாளிப்பட்டியை சேர்ந்தவர் ராசு, 45. ஆடுமேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி இந்திரா, 38. மகள் வெள்ளையம்மாள்,6. சில மாதங்களாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ராசு தனியாக வசித்தார். கடந்த 29ம் தேதி சைக்கிளில் சென்றவர், வீடு திரும்பவில்லை. நேற்று காலை சக்கந்தி அருகே நா.சிவனேந்தலில் உள்ள நாகு என்பவரது தோட்டத்து கிணற்றில் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு, கிராமத்தினர் தகவல் தெரிவித்தனர். சிவகங்கை இன்ஸ்பெக்டர் சங்கர், நவநீதகிருஷ்ணன் எஸ்.ஐ., சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, கல்லால் சைக்கிளுடன் கட்டி கிடந்த உடலை மீட்டனர். சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். கொலையா?:கடந்த ஒரு ஆண்டிற்கு முன் இவருக்கும், உறவினருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்துள்ளது. இந்த முன்பகை காரணமாக யாரும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ