உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நவராத்திரி கலைவிழா நிறைவு

நவராத்திரி கலைவிழா நிறைவு

சிவகங்கை : சிவகங்கை சிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி விழா நடந்தது. தினமும் லலிதா ஸஹஸ்ர நாம லட்சார்ச்சனை, விசேஷ பூஜை நடந்தது. நவராத்திரி மஹோத்ஸவம், லட்சார்ச்சனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா குழு சார்பில் அன்னதானம் நடந்தது.சிருங்கேரி மட கவுரவ மேலாளர் ஜானகிராமன், நிர்வாகி கவுரிசங்கர் செய்திருந்தனர்.

* திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயில் நவராத்திரி கலை விழா நிறைவடைந்தது. தினமும பகல் 11 மணிக்கு பூமாயிஅம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவில் பல்வேறு அவதாரங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. லட்சார்ச்சனையும், தீபாராதனைக்குப் பின் அன்னதானமும் நடந்தது. இரவு 9 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். தொடர்ந்து சூரனை அம்பால் வதம் செய்தார். ஏற்பாடுகளை பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ