உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தலைமை ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம்

தலைமை ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம்

சிவகங்கை: மானாமதுரை அருகேயுள்ள ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் மாணவி ஒருவரின் ஆடையை தலைமை ஆசிரியர் பிரிட்டோ கிழித்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். சக ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரை வகுப்பறைக்குள் வைத்து கதவை மூடினர். மானாமதுரை இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர். தலைமை ஆசிரியரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து குழந்தைகள் நல அலுவலர் பள்ளி மாணவிகளிடம் விசாரணை செய்து மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தலைமை ஆசிரியரை கைது செய்தனர். தலைமையாசிரியர் பிரிட்டோ நடத்தைகளை மீறி ஒழுங்கீனமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதால் பொதுநலன் கருதி தற்காலிகமாக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை