மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
8 hour(s) ago
பயிற்சி முகாம்
8 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
8 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
8 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
8 hour(s) ago
திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவில் சாலையோர மரங்கள் கட்டுமான பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக கருதி சிலர் தீ வைத்து அழித்து வருகின்றனர். மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின் நகர்ப்பகுதி, கிராமப்புற பகுதிகளுக்கு உள்ளேயும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் குறைந்த அளவு சாலைகளே உள்ளன. கிராமப்புற சாலைகளை பராமரித்து வரும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர மரங்களை கண்டு கொள்வதே கிடையாது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட ஒரு சில நகர்ப்பகுதிகளுக்கு உள்ளே மட்டும் ஓரளவிற்கு மரங்கள் உள்ளன. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பேருந்து பயணிகளுக்கு இந்த மரங்கள் ஓரளவிற்கு உதவியாக உள்ளன. சாலையோரம் புதுப்புது குடியிருப்பு உருவாகி வரும் நிலையில் மரங்கள் இடையூறாக இருப்பதாக பலரும் மரங்களின் வேர்ப்பகுதியில் குப்பைகளை கொட்டி தீ வைப்பது, சுடுதண்ணீர், ஆசிட் ஊற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே இருந்த வேப்ப மரம் கடந்த சில மாதங்களுக்கு முன் வேருடன் சாய்ந்ததை அடுத்து மரம் வெட்டி அகற்றப்பட்டது. இதே போல பாக்யா நகரில் நன்கு வளர்ந்த வேப்ப மரமும் காற்று மழை எதுவும் இல்லாத நிலையில் திடீரென சாய்ந்தது. திருப்புவனம் நகர்ப்பகுதியில் சாலையோர மரங்கள் சாய்ந்த உடன் நெடுஞ்சாலைத்துறை அதனை வெட்டி அகற்ற முற்படுகிறதே தவிர மரம் சாய்ந்ததற்கான காரணத்தை கண்டறிவதே இல்லை. இதனால் சாலையோர மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago