உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஊராட்சி தலைவி, கவுன்சிலர்கள்

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஊராட்சி தலைவி, கவுன்சிலர்கள்

காரைக்குடி : சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊராட்சித் தலைவி, ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தனர்.குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் பி.டி.ஓ., ஊர்க்காவலன் தலைமையில் நடந்தது. ஊராட்சி தலைவி தேவி, ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர் பலர் கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர். கூட்டத்தில் ஒரு சில வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.ஊராட்சித் தலைவி தேவி மாங்குடி கூறுகையில்; கிராம சபை கூட்டம் நடத்த ஊராட்சி தலைவிக்கு அதிகாரம் உண்டு. ஊராட்சி நிர்வாகத்திற்கு தான் சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தன்னிச்சையாக கிராம சபை கூட்டத்தை நடத்துகிறார். மேலும் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் நலச் சங்கங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை.பி.டி. ஓ. ஊர்க்காவலன் கூறுகையில்; மாவட்ட நிர்வாகம் என்னை சங்கராபுரம் ஊராட்சி, நிர்வாகத்திற்காக நியமித்துள்ளது. கூட்டத்திற்கு முறையாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் தான் கூட்டத்தை நடத்த வேண்டும். அவர்கள் வராததால் நான் கூட்டத்தை நடத்தினேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ